11-09-2026 வெளிவந்த ஊற்றுக்கண் பகுதியில் இடம் பெற்ற 'புத்தகமும் வாசிப்பும்' என்ற பதிவில், ஜூலியஸ் சீசர் கூறியதாக இப்படிக் குறிப்பிடப்பட்டிருந்தது,

' ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்.. அவனே எனது வழிகாட்டி ' என்று,

இது தொடர்பாக, சுவிஸ் வாசகர் ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார்.

' ஒரு சந்தேகம் , ஜூலியஸ் சீசர் காலத்தில் புத்தகங்கள் இருந்ததா? '

இது ஒரு நல்ல கேள்வி.

இந்தக் கேள்விக்கு இணைய வழியாக தேடி, அனுப்பப்பட்ட பதில் இதோ :

கி.மு 100 - கி.மு 44 .

சீசரின் காலத்தில் புத்தகங்கள் இருந்தன, இன்று நாம் பயன்படுத்தும் நவீன புத்தகங்கள் போல இல்லை.

பப்பிரஸ் [ Papyrus ] தாளில் எழுதி நீண்ட சுருள்களாக இருந்தன. இடமிருந்து வலமாக பிரித்து படிக்க வேண்டும்.

Codex - கோடெக்ஸ் என்ற புத்தக வடிவம் சீசரினால் தான் முதலில் கண்டு பிடிக்கப்பட்டது.

‘Commentaries on the Gallic War ‘- கல்லிக் போர்,

‘Commentaries on the Civil War’ - உள்நாட்டுப் போர்.

ஆகிய, சீசர் எழுதிய புத்தகங்கள் இன்னும் உலகப் புகழ் பெற்ற வரலாற்று நூல்கள் என்று கருதப்படுகின்றன.

  • (இவை இணைய வழி சேகரித்த தகவல்கள்.)