களவும் கற்று மற!

இதென்னடா வம்பாகிப் போச்சு!

களவு என்பது திருட்டு. அப்படிப்பட்ட களவையும் கற்று மறக்க வேண்டும் என்ற பொருள் தரும் இந்தப் பழமொழியை நம் முன்னோர்களா உருவாக்கினார்கள்? நிச்சயமாய் இருக்காது.

தீய செயலாகிய களவை ஏன் கற்க வேண்டும்? பின்னர் மறக்க வேண்டும்? எழுத்து மாறி கருத்து மாறும் அவலம் இங்கேயும் நிகழ்ந்து விட்டது!

எதையும் கருத்தில் கொள்ளாமல் இந்தப் பழமொழியை நம்மில் பலரும் பின்பற்றி வருவது கவலை தரும் விடயம்.

'களவும் கத்தும் மற' என்பதே இந்தப் பழமொழியின் உண்மையான வடிவம். கத்து என்றால், பொய் பேசுதல் உள்ளிட்ட தீய குணங்களைக் குறிப்பது.

களவும் கத்தும் மற.

திருட்டு, பொய் பேசுதல் போன்ற தீய குணங்களின் பக்கம் தலை வைத்துப் படுக்காதே என்று இந்தப் பழமொழி மனிதனுக்கு அறிவுரை சொல்கிறது.

களவும் கற்று மற அல்ல.. களவும் கத்தும் மற.

அனைவருடனும் பகிர்ந்து கொள்வோமா?