கும்பிடும் கைகள் என்று கூறப்படுகின்ற ஓவியத்தைப் பெரும்பாலும் நம்மில் பலர் பார்த்திருக்கிறோம். குறிப்பாக - கிறிஸ்தவ தேவாலயங்களில். தேவாலயங்களில் காணப்படுவதால் அது கிறிஸ்தவர்களுக்கு மட்டும் சொந்தமான ஒரு ஓவியம் அல்ல. எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது. தன்னலமற்ற ஒரு தியாகம் அல்லது அர்ப்பணிப்புக்கான ஒரு குறியீடு அது.

இந்தக் கும்பிடும் கைகள் ஓவியத்தை உற்று நோக்கினால் அது, பாதிக்கப்பட்ட அல்லது ஊனமுற்ற கரங்களின் ஒரு ஓவிய வடிவம் என்பது தெரியவரும்.

தழும்புகளோடு, சமச்சீரற்றுக் காணப்படும் ஒரு வடிவமாக இருக்கும் அந்தக் கும்பிட்ட கைகளின் பின்னால் ஒரு நெகிழ்ச்சி மிக்க சம்பவம் இருக்கிறது.

ஜெர்மனியில் 16-ம் நூற்றாண்டில். ஆல்பேட் டியூரர் என்னும் பிரபல ஓவியரால், தனது சகோதரனுக்கான காணிக்கையாக வரையப்பட்ட ஒரு மை மற்றும் பென்சில் ஓவியம் தான் இது, கரிக்கோல் வரைபடம் என்றும் இதைக் கூறலாம்.

18 பிள்ளைகள் கொண்ட ஒரு குடும்பம். எல்லாப் பிள்ளைகளையும் வளர்ப்பது என்றால் சாமானியமான காரியமா? பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்கு அந்தத் தந்தை பெரும்பாடு பட்டார். பிள்ளைகளில் ஒருவருக்கு ஓவியம் கற்பதில் அலாதியான விருப்பம் இருந்தது. என்ன செய்வது? இதைப் பற்றித் தனது சகோதரன் ஒருவனிடம் பகிர்ந்து கொள்கிறான், அந்தச் சகோதரனுக்கும் இது போல ஒரு விருப்பம் இருப்பதை அவனும் இவனிடம் சொன்னான். இரண்டு பேரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். இருவரில் ஒருவர் ஓவியம் கற்பது - மற்றையவன் அதற்குரிய பணத்தைச் சம்பாதித்துப் படிக்க வைப்பது. யார் படிப்பது? யார் உழைப்பது?. பூவா தலையா போட்டுப் பார்க்கிறார்கள்.

அண்ணன் படிக்க, தம்பி உழைப்பது என்று வருகிறது. பாரிஸ் நகரில் ஒரு பிரபல ஓவியக் கல்லூரிக்கு அண்ணன் அனுப்பப்படுகிறான். அவனுக்கான பராமரிப்புச் செலவைத் தம்பி பொறுப்பெடுத்து ஏற்றுக் கொள்கிறான்.

சரியாக 6 வருடங்கள். பெயர் பெற்ற- திறமை மிக்க ஒரு ஓவியனாக அண்ணன் திரும்புகிறான். " தம்பீ! இதுவரை நீ சுமந்த பாரத்தை இனி நான் ஏற்றுக் கொள்கிறேன். என்னிடம் அதற்கான தகுதியும் வந்துவிட்டது. இனி எனது முறை, நீ போய் ஓவியம் படித்து வா.. நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். "

"அது சாத்தியமில்லை அண்ணா! " என்றப் பதிலைக் கேட்ட அண்ணன் திடுக்கிட்டு, " ஏன் தம்பி அப்படிச் சொல்கிறாய்? " என்று ஆச்சரியத்தோடு கேட்டான்.

" இதோ " என்று தன் கைகளைக் காட்டுகிறான் தம்பி. ஓவியம் வரைவதற்குச் சற்றேனும் தகுதியில்லாதபடிக்கு தம்பியின் கைகள் சிதைந்து,காயமுற்று, உருக்குலைந்து கிடக்கின்றன.

அண்ணன் கலங்கிப் போனான்.

" என்னடா தம்பி இது? ".

" ஆமாம் அண்ணா.. இது நாள் வரையும் நான் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் தான் வேலை செய்தேன்.. அதன் விளைவுதான் இது.. இந்தக் கைகளால் இனி ஓவியம் வரைய முடியாது ".

அந்தத் தன்னலமற்ற தியாகத்தின் தரிசனத்தில் உணர்ச்சி வசப்பட்டுப்போன அண்ணன், கும்பிடும் நிலையில் தம்பியின் கைகளை வரைந்த ஓவியம் தான் இந்தக் கும்பிடும் கைகள் ஓவியம். இன்று, தியாகம் நிறைந்த - தன்னலமற்ற ஒரு அன்புக்கான சக்திமிக்க காணிக்கையாக - ஒரு குறியீடாக - இந்தக் கும்பிடும் கைகள் உலகெங்கும் காணப்படுகின்றன.

Praying Hands.

Praying Hands is an ink and pencil sketch by the German Renaissance artist Albrecht Durer around 1505.

It was a tribute to his brother.

Albrecht was so moved by his brother's sacrifice that he asked Albert to pause in prayer for him. He then drew the famous ink and pencil sketch of the praying hands as a model for an altarpiece he had been commissioned to create for a patron. To this day, praying hands remain as a powerful tribute to sacrificed love and Selflessness.