மகாகவி பாரதியாரின் தீவிர ரசிகனாகவும், அவருடைய பக்தனாகவும் இருந்த, கனக. சுப்புரத்தினம்,‌ தனது இயற்பெயரை மாற்றி, பாரதிதாசன் என்று நாமம் சூடிக் கொண்டார்.

தமிழைத் தன் உயிராய் நேசித்த கவிஞர் பாரதிதாசனுடைய தமிழ்ப் பற்றைக் கூறுகின்ற ஒரு சில சான்றுகள் இதோ:

" தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ்

இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் "

Tamil too is named nectar!

that Tamil, Sweet Tamil..

is as dear of our life!

" எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு! "

Trumpet, oh Conch!

that our life and our wealth

is glorious Tamil.

" கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்

களையிடை ஏறிய சாறும்,

பனி மலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்

பாலிடை ஏறிய சுவையும்,

நனி பசு பொழியும் பாலும் – தென்னை

நல்கிய குளிரின் நீரும்,

இனியன என்பேன் எனினும் – தமிழை

என்னுயிர் என்பேன் கண்டீர்! "

The Succulent pulp inside the fruit,

the juice of full grown Sugar-Cane,

the honey in the dew-moistened flower,

the sweetness of well-heated syrup,

the milk yielded by the wholesome Cow,

the cool juice given by the tender Coconut,

are pleasant, I say; but still

I maintain Tamil is my life - ye know!