உற்றவை
தரு
கொற்றவைத்
தாய்
மலைமகள்
காளி!
பெற்றவை
கொண்டு
போதுமென்ற
மனமே பொன்செய்யும்
மருந்தாய் மாற்றி
வாழ்வின்
இலக்குமி
அலைமகள்
திருமகள்!
அறிவாகித் தொல்லைகள்
தீர்த்து
கலையாகி
ஆணவம் கலைத்து
கன்ம மாயை மலம்பற்றாது
கவலைகள்
தீர்க்கும் தெய்வீகம்
கலைமகள்
சரசுவதி!
முப்பெரும்
தேவியராய் வாழ்வினை
உலகினை
உயிர்களுக்கு
அருளாகிக்
காக்கும்
ஆதிபராசக்திக்கு
ஒன்பது நாள் பெருவிழாக் கண்டு
பத்தாம் நாள்
கொற்றத்து வாள்
அரசின்
அரண்மனை
முற்றத்தில்
நட்டு
மண்ணையும் மக்களையும்
வாள் கொண்டு காப்போமென வாளுக்கு விழா எடுத்து
கொற்றவைக்கு விழாவாக,
புதிய கற்காலம் முதல் தமிழன் கண்ட விழா
வாள் மங்கலம் !
இதனாலேயே கல் தோன்றி ( புதிய கற்கால வாழ்வு) மண் தோன்றாக் காலத்து ( மண் என நாட்டைச் சுட்டிய முல்லை நில வாழ்வு) வாளொடு முன் தோன்றி ( பாதுகாப்புக்கு வாளேந்தி) மூத்தகுடி! ( தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமை யுடன் வாழும் குடி தமிழ்க்குடி) என 10ம் நூற்றாண்டில் கடைசி சேர அரசன் ஐயனாரிதனார் புறப்பொருள் வெண்பாமாலையில் பாடினார்.
இந்த வாண்மங்கல விழாதான் ஆயுதபூசையின் வரலாற்று மூலம்.
காவியத்தில் மகாபாரதத்தில் திரெளபதை என்னும் பெண் தலைமைத்துவம் அர்ஜ்ஜுனன் என்னும் ஆண் தலைமைத்துவத்துக்கு மாற்றப்பட்ட வரலாற்றுத் தொன்மை விழாவின் இன்றைய எச்சமே இந்த ஆயுத பூசை.
வாலை என்பது பெண்ணைக் குறிக்கும் சொல். ஆயினும் பேச்சு வழக்கில் வாழை எனவும் வழங்கப்படுவது உண்டு.
வாழை வெட்டு பெண் ஆட்சி வீழ்த்தப்பட்டது என்பதை அறிவிக்கும் குறியீட்டுச் சொல்லாகவும் ஆய்வாளர்களால் பார்க்கப்பட்டதுண்டு.
இந்திய வரலாற்றில் அசோக மன்னன் வாளேந்திய படைஎடுப்பை முடிவுக்கு கொண்டு வந்து பலியான வீரர் மக்கள் என்பவர் க்கு நன்றி தெரிவித்து வாளை ஆயுதக் களஞ்சியத்தில் சேர்த்த நாளான ஆயுத பூசிப்பு நாள் இந்திய துணைக்கண்டத்து அமைதிக்கான பெருவிழாவாகியது.
மீளவும் சைவ வைணவ மதங்களில் பல்லவ சோழ விஜயநகர ஆட்சி வழியாக இன்றைய ஆயூத பூசையாகியது!
பாலகங்காதர திலகரால் இந்திய தேசிய விடுதலைக் காலத்தில் பண்பாட்டு மீட்டுணர்வின மூலம் மக்களை ஒன்றிணத்து தேசவிடுதலைக்கு உதவும் விழாக்கள் ஆகத் தேசிய விழாக்கால சக்தி வழிபாட்டில் சாரதா நவராத்திரி தமிழர் உட்பட்ட தென்னிந்திய ருக்கும் விநாயகர் சதுர்த்தி வட இந்தியருக்கும் மீள்வடிவமைக்கப்பட்டது. இன்று இவை இந்திய தேசிய விழாக்கள் ஆகவும் சைவ வைணவ விழாக்களாகவும் திகழ்கின்றன.
இந்நன்னாளில்
மண்ணும் மக்களும் பெண்ணும் சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம் உள்ள வாழ்வு பெற இறையருளும் உள உறுதியும் பெற வாழ்த்துகிறோம்
அன்புடன்
மூத்த ஆசியர்கள்
ஊடகவியலாளர்கள்
ஆய்வாளர்கள்
சூ.யோ. பற்றிமாகரன்
முனைவர் றீற்றா பற்றிமாகரன்.

கருத்துகள்
இன்னும் கருத்து இல்லை.