[‘அர்த்தமுள்ள இந்து மதம்' என்பது கவிஞர் கண்ணதாசன் எழுதிய புகழ்பெற்ற சமய மற்றும் தத்துவ நூலாகும்.]
'அட்டமி நவமி தொட்டது நாசம்' என்ற முதுபெரும் வாக்கியத்தைச் சுட்டிக்காட்டும் நம் முன்னோர்கள், அட்டமி தினத்திலன்றோ நவமி தினத்திலன்றோ எந்த நல்ல காரியமும் செய்ய நம்மை அனுமதிப்பதில்லை.
நம் முன்னோர்களின் வானியல் அறிவு சார்ந்த ஒரு விஞ்ஞானம் அதில் இருக்கிறது.
பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை ஒரு நாள் என்று சொல்கிறோம். அதே பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனைச் சுற்றி வருவதை ஒரு வருடம் என்கிறோம்.
நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியைச் சுற்றி வருவதை ஒரு மாதம் என்கிறோம்.
அதனால் தான் மாதத்துக்குத் திங்கள் என்ற பெயர் (திங்கள் - சந்திரன்).
நிலவு தன்னைத்தானே சுற்றிக் கொண்டு பூமியைச் சுற்றிவரும்போது ஒரு பாதி சுற்று (15 நாட்கள்) அமாவாசையாகவும், அடுத்து 15 நாட்கள் பௌர்ணமி என்றும் சொல்கிறோம். அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் இடைப்பட்ட எட்டாவது நாளை அட்டமி என்று சொல்கிறோம். ஒரு மாதம் 2 அட்டமி வரும்; ஒன்று தேய்பிறை அட்டமி, மற்றது வளர்பிறை அட்டமி.
சரியான அட்டமி தினத்தன்று, நாம் வாழ்கின்ற பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் வருகிறது. அந்த வேளையில் சூரியனின் சக்தியும், சந்திரனின் சக்தியும் பூமியைத் தத்தம் பக்கம் இழுப்பதால் ஒருவித Vibration - அதிர்வு - ஏற்படுகிறது. அந்த அதிர்வு, பூமியின் ஜீவராசிகள் அனைத்திலும் எதிரொலிக்கும். அதன் காரணமாக எந்த ஜீவராசியும் சரியான ஒரு முடிவு எடுக்க முடியாது. அவ்வேளைகளில் நாம் எடுக்கும் முடிவு நிலையற்றதாக இருக்கும்.
நவமி கழிந்த பிறகுதான் பூமி தன் இயல்பு நிலைக்குத் திரும்பும். அப்போதுதான், மனிதர்கள் உட்பட, அனைத்து ஜீவராசிகளின் மனமும் நிலைபெறும். அதனால், அட்டமி அன்றும், நவமி நவ நாழிகை வரையும் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்தார்கள்.
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்திலிருந்து…

கருத்துகள்
இன்னும் கருத்து இல்லை.