தேவையான பொருட்கள்:-
உள்ளி – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1 கப்
காய்ந்த மிளகாய் – 6
துருவிய தேங்காய் - 1 கப்
பெருங்காய தூள் – 1 டீ ஸ்பூன், உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
ஒரு கப் (Cup) அளவு பூண்டு எடுத்து, தோல் உரித்து, மெதுவாக ஒரு தரம் மட்டும் நசுக்கி விடவும். அப்படி நசுக்கிய உள்ளியைக் கொஞ்சம் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
அதே கப்பில் ஒரு கப் உளுந்து எடுத்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
ஒரு கப் துருவிய தேங்காய்ப் பூவையும் அதேபோல பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
உறைப்புக்கு ஏற்ப - செத்தல் மிளகாய் 5 அல்லது 6 எடுத்து வறுத்து வைக்கவும்.
கறிவேப்பிலையையும் ஈரம் போக வறுத்து எடுக்கவும்
வறுத்து எடுத்த எல்லாவற்றையும் Jar இல் போட்டு , அதனுடன் கொஞ்சம் உப்பு, பெருங்காயத் தூள் போட்டு அரைத்து எடுக்கவும்.
அதிகம் அரைபட விடாமல் கொஞ்சம் கொரகொரவென்று இருந்தால்தான் சிறப்பாக இருக்கும்.
பரிமாறும் போது கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டுக் குழைத்து சாப்பிடலாம்.

கருத்துகள்
இன்னும் கருத்து இல்லை.