மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் உள்ள மேன்மை.

எமது அன்றாடங்கள், எமது பிள்ளைகள், எமது தொழில், ஏன் எமது வாழ்க்கையின் போக்கு.. என, இவை அனைத்துமே எங்கள் கட்டுப்பாட்டுக்குள் தான் என்று நாம் நம்பியிருந்த காலம் ஒன்று உண்டு.

கவனமாக அனைத்தையும் திட்டமிட்டோம். கனவுகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டோம். அன்றாட நடைமுறைகள், எம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் என யாவுமே எமது தேவையாக இருந்ததில், அனைத்தையும் கட்டியெழுப்பவும், கவனிக்கவும், முன்னின்று நடத்தவும், பாதுகாக்கவும் எம்மை ஆக்கிக் கொண்டோம்.

ஆனால், வாழ்க்கை மெதுவாக மாறத் தொடங்கியது. நாம் இறுகப் பற்றியிருந்தவை மெது மெதுவாக எம்மை விட்டு விலகத் ஆரம்பித்தன. எல்லா நேரமும் வலியுடன் அல்ல.. சில வேளைகளில் கண்ணியமாகவும்.

பிள்ளைகள் வளர்ந்து கொஞ்சம் விலகத் தொடங்கினார்கள். எம்மைக் கருத்தில் கொள்ளாமல் அல்ல.. அவர்கள் தங்களுடைய வாழ்க்கையைத் தாமே உருவாக்கும் தேவை இருந்தது.

படிகளில் ஏறுவது சிரமம்தந்தபோது வீடுகளை விற்க வேண்டி வந்ததே தவிர, அவை போற்றப்பட வில்லை என்பதனால் அல்ல.

வீட்டின் தலைவனாக, தாயாக, ஆசிரியராக, பொறியாளராக என இன்னும் எமக்கிருந்த தகுதிகள் யாவும் வெண் மணலில் எழுதிய எழுத்துகளாக பின்னாளில் மறைந்து போயின.

எமது வாழ்க்கை மாறிவிட்டதை நாம் உணர்ந்து கொள்ள நேர்ந்தது – அது அமைதியான ஒரு மாலைப் பொழுதின் தருணம் என்று கூட சொல்லலாம்.

தொலைபேசியில் தினமும் எமை அழைத்துப் பேசியவர்கள்

இப்போ குறுஞ்செய்திகளை மட்டும் அனுப்பத் தொடர்கினார்கள்.

எம்மைச் சுற்றி அனைத்துமே புதிய முகங்கள். எங்களுடைய பிரிதிபிம்பங்கள் மீது நாம் அறியாமலேயே கீறல்கள் படிந்து கொண்டிருந்ததை நாம் அவதானிக்கவில்லை.

ஆனால், இவற்றினால் எல்லாம் துக்கம் ஏற்படாமல் வேறொன்று மனதை ஆக்கிரமித்தது. அது ஒரு வித மன அமைதி.

கடந்து போதல் என்பது எதையும் இழப்பதாக ஆகிவிடாது என்பதை நாம் மெதுவாகப் புரிந்து கொண்டோம். உண்மையிலேயே அது அமைதிக்கான ஒரு இட ஒதுக்கீடு மட்டுமே!

கடந்து போதல் என்பது, எமது உள்ளங்கள் சங்கிலித் தொடரின்றி நிகழ்ச்சிகளை எடுத்துச் செல்வது தான்.

இனி, நாங்கள் இந்த உலகின் மையப் பொருள்கள் அல்ல, என்ற உண்மையும் அதே சமயம் உலகின் ஒரு ஆழமான அழகான பகுதி மட்டுமே என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுதலே இதன் சாராம்சம்.

கடந்து செல்லுதல் பலவீனம் அல்ல.. அது ஒரு மேன்மை. பாறைகளைக் கடந்து போகும் ஆற்று நீர் அவற்றுடன் மோதாமல்,அவற்றைச் சுற்றி நடனமாடிக் கொண்டு செல்லுதல் போன்றதே இந்தக் கடந்து போதல்.

இத்தகைய ஒரு காலப்பகுதியில் தான், உலகம் அமைதியாகவும், ஏற்றுக்கொள்ளுதலின் பலத்தை நாம் கற்பதும் – உணர்வுகளைத் தவிர எதுவும் எம்மிடம் இல்லை என்ற புரிதல் ஏற்படுவதும் நிகழ்கிறது.

எனவே, யன்னல் ஓரத்தில் அமர்ந்தபடி தேநீரைச் சுவைக்கும் போது புன்சிரிப்பு படர்கிறது. எமது வாழ்க்கை பூரணத்துவம் பெற்றுவிட்ட ஒன்று என்றல்ல, ஆனால், நாங்கள் வாழ்ந்தோம், நாங்கள் நேசித்தோம், இவை யாவற்றையும் ஒரு மேன்மையுடன் கடந்து போய்க் கொண்டிருக்கிறோம். என்பதற்காக...