மரபுத் தொடர் 1

“வாயடைத்துப் போதல்”

பொருள்:

பேச முடியாமல் திகைத்துப் போதல் / ஆச்சரியத்தால் பேச்சிழத்தல்.

எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:

  1. அவன் சொன்ன பதிலைக் கேட்டு நான் வாயடைத்துப் போனேன்.

  2. எதிர்பாராத அதிர்ச்சியளிக்கும் செய்தியைக் கேட்டதும் அங்கிருந்த அனைவரும் வாயடைத்துப் போயினர்.

  3. குழந்தையின் அந்த அறிவுள்ள கேள்வியைக் கேட்டு அவளது பெற்றோர் வாயடைத்துப் போனார்கள்.

  4. அவள் மேடையில் நிகழ்த்திய அற்புதப் பேச்சைக் கேட்டுப் பார்வையாளர்கள் வாயடைத்துப் போயினர்.

  5. ஆசிரியரின் திடீர் சோதனைக் கேள்வியைக் கண்ட மாணவன் பதில் கூற முடியாமல் வாயடைத்துப் போனான்.

  6. அந்தப் பழைய கோட்டையின் பிரம்மாண்டமான அழகைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் வாயடைத்துப் போயினர்.

  7. நண்பன் செய்த துரோகத்தைப் பற்றி அறிந்ததும் அவனால் பேச இயலாமல் வாயடைத்துப் போய் நின்றான்.

  8. போட்டியில் தான் பெற்ற வெற்றியை நம்ப முடியாமல் அவன் சில நிமிடங்கள் வாயடைத்துப் போய் நின்றான்.

  9. அந்த விபத்தின் கோரக் காட்சியை நேரில் பார்த்தவர்கள் அனைவரும் வாயடைத்துப் போயினர்.

  10. மன்னரின் எதிர்பாராத பரிசளிப்பைக் கண்ட ஏழை விவசாயி மகிழ்ச்சியால் வாயடைத்துப் போனான்.

மரபுத்தொடர் 2

முகஞ்சுழித்தல்

பொருள் விளக்கம்

வெறுப்பு, அருவருப்பு அல்லது அதிருப்தி காரணமாக முகத்தைச் சுளித்தல்.

உதாரண வாக்கியங்கள்

1. முருங்கைக்கீரை குழம்பைப் பார்த்ததும் தம்பி முகஞ்சுழித்தான்.

2. வெண்டிக்காய் பால்கறி வேகவில்லை என்று அம்மா முகஞ்சுழித்தார்.

3. ஆசிரியர் கொடுத்த வீட்டுப்பாடத்தைக் கேட்டு மாணவர்கள் முகஞ்சுழித்தனர்.

4. கசப்பான மருந்தைக் குடிக்கும்போது குழந்தை முகஞ்சுழித்தது.

5. தயிர் புளித்துப் போனதால் அப்பா முகஞ்சுழித்தார்.

6. அவன் பொய் சொன்னதைக் கேட்டு நான் முகஞ்சுழித்தேன்.

7. Food City-யில் கூட்டம் அதிகமாக இருந்ததால் எல்லோரும் முகஞ்சுழித்தனர்.

8. சைக்கிள் சக்கரத்தில் காற்று இல்லை என்றதும் அண்ணன் முகஞ்சுழித்தான்.

9.முகஞ்சுழிக்காமல் சாப்பிட்டால் தான் உடம்புக்கு நல்லது என்று அம்மா சொன்னார்.

10.மோசமான வாசனையை உணர்ந்தபோது, அவள் முகஞ்சுழித்தாள்.

மரபுத்தொடர்: 3

“அடிவயிற்றில் நெருப்பைக் கட்டுதல்”

பொருள் விளக்கம்:

மிகுந்த பயம் / பதட்டத்தை மனதில் அடக்குதல்

மொழிப் பயன்பாட்டில்:

1. பரீட்சை முடிவு வரும் வரை அவன் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருந்தான்.

2. முதலாளி முதலாளி அவருடைய அறைக்குள் அழைக்கும்வரை, அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு பொறுமையாக இருக்கையில் அமர்ந்திருந்தான்.

3. மகள் வீடு திரும்ப தாமதமானதால், அம்மா அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு காத்திருந்தார்.

4. புயல் செய்தியை கேட்டதும், மீனவர்கள் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

5. இறுதிப் பேச்சுப் போட்டியில் மேடையில் தன்னுடைய முறை வரும்வரை பங்கு பெற அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு காத்திருந்தான் அந்த மாணவன்.

6. கடன் கொடுத்தவன் வீட்டு வாசலில் நிற்பதைக் கண்டு, அவன் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்தாள்.

7. நேர்முகத் தேர்வுக்காக காத்திருக்கும் போது எல்லோரும் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருப்பார்கள்.

8. அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு, மருத்துவ அறிக்கைக்காக அந்த முதியவர் காத்திருந்தார்..

9. அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருப்பதை விட, மனம் விட்டு பேசி கருத்து இடைவெளிகளை தீர்ப்பது சிறந்தது.

10. புயல் வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதும், கடற்கரையோர மக்கள் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு விழி பிதுங்கி இருந்தனர்.

மரபுத்தொடர் 4

"ஆறப்போடுதல்"

பொருள்:

ஒரு வேலையை தள்ளிப் போடுதல், காலம் கடத்துதல், உடனே செய்யாமல் விடுதல்.

உதாரண வாக்கியங்கள்:

1. நாளை செய்ய வேண்டிய வீட்டுப்பாடத்தை ஆறப்போடாதே, இன்றே முடி.

2. அவன் எப்போதும் வேலையை ஆறப்போட்டுக் கொண்டே இருப்பான்.

3. காலையில் நடைப்பயிற்சியை ஆறப்போடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

4. பணம் கட்டுவதை ஆறப்போட்டால், அபராதம் கட்ட வேண்டி வரும்.

5. கோபத்தில் உடனே பதில் சொல்லாமல், கொஞ்சம் ஆறப்போடுவது புத்திசாலித்தனம்.

6. உணர்ச்சிவசப்பட்டுக் கடிதம் எழுதத் தொடங்கியதும், என் மனைவி அதை ஆறப்போடும்படி அறிவுறுத்தினார்.

7. உடம்பு சரியில்லை என்று டாக்டரை பார்ப்பதை ஆறப்போடாதே.

9. நல்ல வாய்ப்பு கிடைக்கும் போது அதை ஆறப்போடக் கூடாது.

10. தேநீர் குடிக்காமல் ஆறப்போட்டால், சூடு போய் சுவை குறைந்து விடும்.

மரபுத்தொடர் 5

“புருவத்தை உயர்த்துதல்”

பொருள் விளக்கம்:

எதிர்பாராத ஒரு விஷயம் நடக்கும்போது அல்லது கேட்கும்போது, இரண்டு புருவங்களும் தானாகவே மேலே உயரும்.

மொழி வழக்கில்:

  1. அலுவலகச் சூழல்:

"பத்து வருட அனுபவம் உள்ள மூத்த அதிகாரியை விட, புதிதாகப் பணியில் சேர்ந்த இளம் ஊழியர் நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டிக் கொடுத்ததைக் கண்டு பணிப்பாளர் தன் புருவத்தை உயர்த்தினார்."

  1. குடும்பச் சூழல்:

"எப்பொழுதும் சிக்கனமாகச் செலவு செய்யும் தாத்தா, திடீரென விலையுயர்ந்த புதிய கைப்பேசியை வாங்கியதைப் பார்த்த குடும்பத்தினர் அனைவரும் புருவத்தை உயர்த்தினர்."

  1. கல்விச் சூழல்:

"வகுப்பில் கடைசி மாணவனாக வந்தவன், இம்முறை நடைபெற்ற பரீட்சையில் முதல் மதிப்பெண் பெற்றதைக் கண்டு ஆசிரியர் வியப்புடன் புருவத்தை உயர்த்தினார்."

  1. வணிகம் மற்றும் பொருளாதாரம்:

"சந்தை நிலவரம் சரியில்லாத இந்தக் காலத்திலும், அந்த நிறுவனம் எதிர்பாராத லாபத்தைப் பதிவு செய்திருப்பது பங்குச் சந்தை நிபுணர்களின் புருவத்தை உயர்த்தியுள்ளது."

  1. அரசியல் களம்:

"எதிர்க்கட்சித் தலைவர் திடீரென ஆளுங்கட்சியின் வளர்ச்சித் திட்டங்களைப் பாராட்டிப் பேசியது அரசியல் வட்டாரத்தில் புருவத்தை உயர்த்தச் செய்தது."

  1. சமூக ஊடகங்கள்:

"சாதாரண கிராமத்து இளைஞர் ஒருவர் வெளியிட்ட முதல் குறும்படமே அனைத்து உலகத் திரைப்பட விழாக்களிலும் விருது வென்றது சமூக வலைத்தளங்களில் அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது."

  1. விளையாட்டுத் துறை:

"பயிற்சி ஆட்டத்தில் பல முறை தோற்ற அணி, இறுதிப் போட்டியில் உலகச் சாம்பியனை வீழ்த்தியதைப் பார்த்த ரசிகர்கள் தங்களின் புருவங்களை உயர்த்தி ஆச்சரியப்பட்டனர்."

  1. நண்பர்கள் வட்டம்:

"எந்தக் கூட்டத்திற்கும் வராத அமைதியான நண்பன், திடீரென ஒரு பெரிய இசை நிகழ்ச்சியைத் தானே முன்னின்று நடத்தியதைக் கண்ட நண்பர்கள் புருவத்தை உயர்த்தினர்."

  1. கலை மற்றும் இலக்கியம்:

"வழக்கமான பாணியை மாற்றிவிட்டு, முற்றிலும் புதிய சிந்தனையோடு எழுதப்பட்ட அந்தப் புதுக்கவிதை நூல் இலக்கிய ஆர்வலர்களின் புருவத்தை உயர்த்தியது."

  1. பொது வாழ்க்கை:

"எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்த அந்தப் பிரபலத்தின் வீட்டில் அரசு அதிகாரிகள் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட கணக்கில் அடங்காத சொத்துக்கள் ஊர் மக்களின் புருவத்தை உயர்த்தின."

மரபுத் தொடர் 6

காதிலே பூ சுற்றுதல்:

பொருள் விளக்கம்:

ஒருவரை ஏமாற்றுவது அல்லது பொய் சொல்லி நம்ப வைப்பது என்பதைக் குறிக்கும்

மொழிப் பாவனையில்:

1. தரமில்லாத பொருளை கொடுத்து கடைக்காரன் என் காதிலே பூ சுற்றினான்.

The shopkeeper fooled me by giving a low-quality product.

2. அவன் கடன் வாங்கும் போது இனிப்பாக பேசி என் காதிலே பூ சுற்றினான்.

He sweet-talked and fooled me when borrowing money.

3.தேர்தல் வாக்குறுதிகளால் அரசியல்வாதிகள் மக்கள் காதிலே பூ சுற்றுகிறார்கள்.

Politicians fool people with election promises.

4.பரிசு கிடைத்ததாக கூறி ஆன்லைனில் என் காதிலே பூ சுற்ற பார்த்தார்கள்.

They tried to fool me online saying I won a prize.

5. பதவி உயர்வு தருவதாக சொல்லி முதலாளி தொழிலாளர்கள் காதிலே பூ சுற்றினார்.

The boss fooled the workers promising a promotion.

6. படித்துவிட்டேன் என்று சொல்லி ரமேஷ் ஆசிரியர் காதிலே பூ சுற்றினான்.

Ramesh fooled the teacher saying he had studied.

7. ஊருக்கு போகிறேன் என்று பொய் சொல்லி தம்பி அம்மா காதிலே பூ சுற்றினான்.

Saying he was going to the village, brother fooled mother.

8. குறைந்த விலை என்று விளம்பரம் செய்து நிறுவனம் வாடிக்கையாளர்கள் காதிலே பூ சுற்றியது.

Advertising low price, the company fooled customers.

9. அவள் உண்மையாக நேசிப்பதாக சொல்லி அவன் காதிலே பூ சுற்றினாள்.

She fooled him saying she truly loved him.

10. யார் என்ன சொன்னாலும் உடனே நம்பி காதிலே பூ சுற்றிக்கொள்ளாதே.

Don't get fooled immediately believing whatever anyone says.

மரபுத்தொடர் 7

"கொட்டித் தீர்த்தல்"

பொருள்:

மனதில் உள்ளதை முழுமையாக வெளிப்படுத்துதல் (To pour out everything in the heart / To express completely).

எடுத்துக்காட்டு வாக்கியங்கள்;

  1. தன் நண்பனிடம் பல நாட்களாக மறைத்து வைத்திருந்த ஆதங்கத்தை அவன் மனம் விட்டு கொட்டித் தீர்த்தான்.

  2. நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த தாயிடம், தன் குறைகளையும் கவலைகளையும் மகள் அழுது கொண்டே கொட்டித் தீர்த்தாள்.

  3. ஆசிரியர் அன்பாகப் பேசியதும், மாணவன் தன் மனதில் இருந்த அத்தனை பயத்தையும் கொட்டித் தீர்த்தான்.

  4. கூட்டத்தில் தனது நீண்டகாலத் தேடலையும் அனுபவங்களையும் அவர் எவ்விதத் தயக்கமுமின்றி கொட்டித் தீர்த்தார்.

  5. மனக் கவலைகளை அப்படியே வயிற்றுக்குள்ளேயே வைத்துக் கொள்ளாமல், யாரிடமாவது பேசி கொட்டித் தீர்ப்பது நல்லது.

  6. காவல்துறை அதிகாரியிடம் அந்த நபர் தன் குற்றங்களை ஒப்புக்கொண்டு எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தார்.

  7. கவிஞர் தனது கவிதைகள் மூலமாகச் சமூகத்தின் மீதான கோபத்தையும் ஆதங்கத்தையும் அப்படியே கொட்டித் தீர்த்துள்ளார்.

  8. தன் தோழியிடம் மனம் விட்டுப் பேசிய பின்பே அவளுக்கு நிம்மதி பிறந்தது; எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்துவிட்டாள்.

  9. இந்த நாடகத்தில் கதாநாயகன் தனது ஏமாற்றங்களை உரத்த குரலில் பேசி கொட்டித் தீர்க்கும் காட்சி கண்கலங்கவைக்கும்.

  10. சோகமான பாடலைக் கேட்டுக் கொண்டே தன் அழுகையை வெளியே கொட்டித் தீர்த்துவிட்டு அவள் இயல்பு நிலைக்குத் திரும்பினாள்.