முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு கரையோர அழகிய கிராமம் அது. காலை நேர உப்புக் காற்று வேப்பமரங்களைத் தழுவிச் செல்லும் வேளை.
மீனவன் ஒருவன் கையில் ஒரு வினோதமான பெரிய மீனுடன் ஊர்த்தலைவரின் வீட்டு வாசலில் வந்து நின்றான். ஒரு மூன்று கிலோ நிறை தேறும். முகம் முழுவதும் கடல் உப்பு படிந்த அவனது கண்களுக்குள் நீல கடல் தெரிந்தது.
"சர்மன் ஐயா, இது சாதாரண மீன் இல்ல. கடலின் நடுவே பளீரென்று ஒளி வீசிக்கொண்டு கடல் உவட்டுக்களுக்குள்ளாலே ஓடியது. கரைக்கு வந்தவுடன் எத்தனையோ பேர் கேட்டுத்தானே பார்தவே. ஒருத்தரையும் நிமிர்ந்துகூட பார்க்காமல் ஓடி உங்களிடம் வந்துவிடடேன். இதைக் கண்டதும் உங்கள் நினைவுதான் வந்தது. அதனால்தான் உங்களுக்குக் கொண்டு வந்தேன்" என்றான்.
ஊர்த்தலைவர் மனம் குளிர்ந்தார். வேட்டி மடிப்பிலிருந்து இரண்டு ஐயாயிரம் ரூபாய் தாள்களை எடுத்து மகிழ்ச்சியுடன் கொடுத்தார்.
உள்ளே இருந்து பார்த்துக் கொண்டிருந்த தலைவரின் மனைவிக்கு கோபம் பொங்கியது.
"ஒரு அற்ப மீனுக்கு பத்தாயிரமா? இஞ்சேருங்கோ காசை திருப்பி வாங்குங்கோ" என்று பொரிஞ்சு தள்ளிக்கொண்டு வீட்டுக்கு வெளியே வந்தாள்.
"இஞ்ச பார், முடிஞ்ச யாவாரத்தை மாத்தக் கூடாது. கொடுத்த காசை திருப்பி வாங்கிறது அழுகல் பழக்கம்" என்று தலைவர் மறுத்தார்.
மனைவி விடவில்லை. ஒரு தந்திரம் சொன்னாள். "சரி, அவனைக் கூப்பிட்டு இந்த மீன் ஆணா பெண்ணா என்று கேளுங்கள். ஆண் என்று சொன்னால் பெண் மீன் தான் வேண்டும் என்றும், பெண் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள். எப்படியும் பணத்தைத் திருப்பி வாங்கி விடலாம்."
கடப்படி வரை சென்ற மீனவன் திருப்பி அழைக்கப்பட்டான். மீனவன் திரும்பி வந்து தலைவர் மனைவி முன் நின்றான். தலைவி கேள்விக் கணையைத் தொடுத்தாள்.
மீனவன் ஒரு கணம் விழிபிதுங்கி, பின் சுதாரித்துக் கொண்டான்.
"இது ஆணுமில்லை, பெண்ணுமில்லை அம்மா. இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன். ஆண் கடலுக்கும் பெண் கடலுக்கும் பாலமான மீன். அதனால்தான் சர்மன் ஐயாவுக்குக் கொண்டு வந்தேன்" என்று சாதுரியமாகப் பதிலளித்தான்.
இந்த பதிலால் நெகிழ்ந்த ஊர்த்தலைவர், “இந்தா இதையும் வைச்சுக்கொள்ளு” என்று சொல்லி மேலும் ஒரு ஐயாயிரம் ரூபாயை வேட்டி மடிப்பிலிருந்து இழுத்து அவனுக்குக் கொடுத்தார்.
அப்போது தலைவரின் மடியிலிருந்து பத்து ரூபாய் நாணயம் ஒன்று கீழே விழுந்து செம்மண்ணில் உருண்டோடியது. மீனவன் ஓடிச் சென்று அதைத் தேடி எடுத்தான்.
மனைவிக்கோ கோபம் பொத்துக் கொண்டு வந்தது. "பாருங்கள் பேராசையை! கீழே விழுந்த சில்லறைக் காசையும் விடவில்லை" என்று பற பறவெனப் பொரிந்தாள்.
மீனவன் நிதானமாகத் திரும்பிச் சொன்னான்.
"பேராசையில் எடுக்கவில்லை சர்மன் ஐயான்ர அம்மா. அந்த நாணயத்தில் சர்மன் ஐயாவின் கை பட்டது. அதை யாராவது அழுக்குக் காலால் மிதித்து விடக் கூடாது என்றுதான் எடுத்தேன். அவருடைய கௌரவம் மிதிபடக் கூடாது பாருங்கோ. யாராவது தெரியாமல் மிதித்தால் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியாது."
இதனால் மேலும் நெகிழ்ந்த தலைவர், மேலும் இன்னொரு ஐயாயிரம் ரூபாய் அழகான தாள் ஒன்றை எடுத்து மீனவனிடம் கொடுத்தார்.
இப்பொழுது ஊர்த்தலைவர் மனைவி தன் வாயை மூடிக் கொண்டாள். அன்று வாயை மூடியவள்தான். இன்னும் திறக்கவே இல்லை.
ஆங்கில வடிவம்:-
The Tactful Fisherman
It was a picturesque, coastal village in the Mullaitivu district. The gentle, saline morning breeze gently caressed the neem trees as they stood tall in quiet dignity.
A fisherman stood at the doorstep of the village chief's house, holding a wondrous, large fish in his hands. It would have weighed around three kilos. Encrusted with sea salt, his eyes mirrored the vast, azure depths of the ocean.
"Respected Chairman, this is no ordinary fish," he said. "It gleamed brilliantly in the mid-ocean and darted right through the frothing sea currents. So many people asked me for it along the shore, but I did not even spare them a glance. I ran straight to you, because the moment I saw it, you were the only one who came to my mind. That is why I brought it for you."
The village chief’s heart melted. He gently drew two crisp five-thousand-rupee notes from the folds of his veshti and handed them over with a pleased smile.
Watching from within the house, the chief's wife flared up in anger.
"Ten thousand rupees for a petty fish?! Come here and take this money back!" she burst out, marching furiously toward the door.
"Look here, one must never undo a settled bargain," the chief countered. "Taking back money once given is a rotten habit."
Unrelenting, his wife proposed a clever trick. "Very well, call him back and ask him whether this fish is male or female. If he says it is male, demand the female fish. If he says female, demand the male. Either way, we can easily get our money back."
The fisherman, who had nearly reached the village boundary, was called back. He returned and stood respectfully before the chief's wife. She fired her cunning question.
For a fleeting second, the fisherman was taken aback, but he quickly regained his composure.
"This is neither male nor female, Amma," he replied with profound cleverness. "It is a wondrous fish bearing the traits of both—a bridge connecting the male ocean and the female ocean. That is precisely why I brought it for respected Chairman Ayya."
Deeply moved by this witty response, the village chief said, "Here, keep this as well," and pulling yet another five-thousand-rupee note from his veshti folds, he handed it to him.
Just then, a ten-rupee coin slipped from the chief's lap, rolling and spinning across the red earth. The fisherman darted forward, picked it up, and cradled it in his palm.
The wife's fury boiled over once more. "Look at such boundless greed! He wouldn't even spare a fallen coin!" she scolded harshly.
Calmly, the fisherman turned back and replied:
"I did not pick it up out of greed, respected Chairman's wife. Respected Chairman Ayya's hand had touched that coin. I only took it so that no one would trample upon it with dirty feet. Look, his dignity must not be trodden upon. Even if someone were to step on it unknowingly, I simply could not bear it."
Touched beyond measure by these words, the chief drew yet another crisp five-thousand-rupee note and placed it in the fisherman's hands.
At that moment, the village chief's wife firmly sealed her lips. And the lips she closed that day have never opened since.

கருத்துகள்
இன்னும் கருத்து இல்லை.